Header Ads



வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தியிருந்தால்..!


(தில்லையடியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்)

வடக்கு முஸ்லிம்களின் மீ்ள்குடியேற்றம் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அன்று சர்வதேச மயப்படுத்தியிருந்தால் எமது மக்களது பிரச்சினைகள் எப்போதே தீர்க்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று அந்தப்பணிகளை நாம் கட்சியமைத்து செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.இது தொடர்பில் அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதுடன் பேசியதாகவும் கூறினார்.

புத்தளம் தில்லையடி உமராபாத் அல்-அன்சாரி மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்ற பரிசளிப்பு மற்றும் அறிவகம் அன்சாரி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் ஏ.வதுாத் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,எம்.ஜனுாபர்,முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹ்யான்,மன்னார் வலயக் கல்விப் பணிபாளர் எம்.எம்.சியான்,வடமாகாண மஜ்லிசுல் சூறா அமைப்பின் தலைவர் மௌலவி முபாறக் றசாதி உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர். அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 1 இலட்சம் முஸ்லிம்கள் பல்வேறு அகதி முகாம்களில் வாழ்ந்து அனுபவித்த துன்பங்களை நாமறிவோம்.எத்தனை விதமான இன்னல்களை நாம் சந்தித்தோம்.இன்றும் அவைகள் எமது கண்முன் காட்சிகளாக இருக்கின்றது.நடந்து வந்த பாதையின் முற்களில்பதம் பார்த்த பாதங்களில் இருந்து வழிந்த குருதிகளின் வரலாற்றினை சுமந்தவர்கள் நாங்கள்.இன்று எமது மக்களுக்ான அரசியல் தலைமைத்துவத்தினை இல்லாமல் செய்யும் பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.கட்சிகளின் பேரால் எமக்குள் பிளவை ஏற்படுத்த பார்க்கின்றனர்.

எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநியாயங்களை தட்டிக் கேட்டால் என்னை இனவாதியாக சித்தரித்துக் காட்டுகின்றனர்.சில ஊடகங்கள் என்மீது அபாண்டங்களை சுமத்தி தொடர்ந்து தமிழ் மக்களின் விரோதிகளாக காட்ட முனைகின்றனர்.கடந்த 20 வருடங்களாக அல்லல் பட்டு வாழந்து வரும் இம்மக்களின் விமோசனத்திற்கோ,இம்மக்களது எதிர் காலம் சிறந்ததாக அமைய வேண்டும் என்ற சிந்தணைகளற்றவர்கள்,எமக்கு கிடைக்க இருந்த மற்றுமொரு மாகாண சபை பிரதி நிதித்துவத்தை இல்லாமல் ஆக்கினர்.அமைப்புக்கள ஒவ்வொரு பெயர்களில் ஏற்படுத்தி எமக்கெதிரான சதிகளை செய்த போதும்,அல்லாஹ்வை அதனை முறியடித்தான்.

இவ்வாறான நிலையில் பாதைகள்,பாடசலைகள்,வீடுகள்,உள்ளிட்ட பல நியமனங்களை செய்தோம்.அதனுாடாக வெளியேற்றப்பட்ட மக்கள் நன்மையட்டும் என்று ,அதற்கெதிராகவும் விசமப் பிரசாரங்களை செய்கின்றனர்.இவர்கள் எதை செய்த போதும்,நாம் எமது பணியினை நேர.மையாக செய்து கொண்டே வருகின்றோம்.அதே போல் மாணவர்களை தமது பிள்ளைகளாக பராமறித்து கற்றல் செயற்பாடுகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும்.நீங்கள் செய்கின்றவை பற்றி நாளை மறுமையில் இறைவனிடம் விசாரிக்கப்படுவீர்கள் என்ற அமுதவாக்கினை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இன்று எமது சமூகம் செல்லும் பாதையானது ஆபத்தானதாகவுள்ளது. மாணவர்கள்,இளைஞர்கள் மத்தியில் ஒழுக்கமின்மை ஏற்பட ஆரம்பித்துள்ளது.வீடுகளில் தொலைக்காட்சி நாடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.இதனை பார்த்து செயலுருவம் கொடுக்க முனைகின்றனர்.இது தவிர்க்கப்பட வேண்டும்.இஸ்லாமிய நெறி தவறாத சமூகத்தினை கட்டியெழுப்ப புத்தி ஜீவிகள் முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும். என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒலிபெருக்கி பொருட்களையும் அமைச்சர் கையளித்தார்.

No comments

Powered by Blogger.