அங்கீகாரம் இன்றி வெளிநாடுகளில் தொழில் புரிகின்றர்களின் பிரச்சினைகளுக்கு மத்தியஸ்த்தம் வகிக்க முடியாது
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனையின் அங்கீகாரம் இன்றி சுயமாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்றர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளில் மத்தியஸ்த்தம் வகிக்க முடியாது என்று அந்த பணிமனை தெரிவித்துள்ளது. அதன் முகாமையாளர் மங்கள ரந்தெனிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து பலர் சுற்றுலா மற்றும் கல்வி வீசாவில் சென்று வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.
அவர்களின் தொழில் உரிமைகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனை பொறுப்பு கூறாது. மனிதாபிமான அடிப்படையிலேனும் அவர்களுக்கான மத்தியஸ்த்தம் வகிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment