கோத்தபாய ராஜபக்ஸ என்னை சுப்பர் மார்க்கட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை - முஸம்மில்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்காக தான் இதுவரை கடைக்கு போகவில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளரும் தன்னை இதுவரை சுப்பர் மார்க்கட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை எனவும் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸ்ஸாமில் தெரிவித்தார்.
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்கா புனரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அரசாங்கத்திற்கு கடைக்கு போவதாகவும் எனது கட்சியினர் கூறுகின்றனர்.
நான் கடைக்கு போகவுமில்லை. கோத்தபாய என்னை சுப்பர் மார்க்கட்டிற்கு அழைத்துச் செல்லவுமில்லை.
சகலவற்றையும் ஒரு கோணத்தில் இருந்து பார்க்க கூடாது. அனைத்தையும் மகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டும்.மாறுப்பட்ட கோணத்தில் பார்க்கும் போது எமக்கு கண் பார்வை தெரியாது. வாய் திறக்க முடியாது. நான் முதல் நிலையான ஐக்கிய தேசியக் கட்சிக்காரன்.
இதன் காரணமாகவே எனது மனைவியை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மாகாண சபைத் தேர்தலில் நிறுத்த முயற்சித்தேன். ஆளும் கட்சியில் அல்ல ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் நிறுத்தவே முயற்சித்தேன்.
எனது மனைவி ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்தும் தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. அவர்கள் அதனை என்னிடம் கூறவில்லை.
ஆனால் எனது கட்சியினர் அந்த பணிகளை செய்து கொடுத்தனர். அப்படியானால் அரசாங்கத்திற்கு கடைக்கு போனது நானா? அவர்களா? என முஸ்ஸாமில் கேள்வி எழுப்பினார்.
Post a Comment