Header Ads



சட்டக் கல்லூரி விவகாரம் குறித்து ஹக்கீம் பாராளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளார்

(Gtn) சட்டக்கல்லூரி விவகாரம் குறித்து நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளார். இலங்கை சட்டக்கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு ஹக்கீம் விசேட உரையாற்றவுள்ளார்.

சட்டக்கல்லூரி நிர்வாக மாற்றத்தினால் சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிலர் பலவந்தமான அடிப்படையில் சட்டக்கல்லூரியில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிட்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாராளுமன்றின் சில உறுப்பினர்கள் முன்னாள் சட்டக் கல்லூரி மாணவர்கள் எனவும் அவர்கள் கல்லூரியின் நிலைமை பற்றி அறிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.