உலமாக்களுக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் மேலதிக தகவல்கள் பெற..!
(டீன் பைரூஸ்)
காத்தான்குடி:ஹிறா பவுண்டேஸன் ஏற்பாட்டினில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லுாரி தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் (01.02.2014 சனிக்கிழமை) இன்று காத்தான்குடி ஜம் இய்யத்துல்உலமா கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் MLA.முஹம்மது ஹிஸ்புழ்ழாஹ் MA MP, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் MF.முகம்மது சிப்லி Eng ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.நண்பகள் 12.30(ளுஹா் தொழுகையுடன்) ஆரம்பமான இக் கலந்துரையாடலில் காத்தான்குடி சம்மேளன உறுப்பினர்கள்,காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர்,செயலாளர்,உறுப்பினர்கள்,கதீப்மார் சம்மேளன உறுப்பினர்கள், ஏறாவுர் மற்றும் கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர்,செயலாளர், உறுப்பினர்கள்,சமூகத் தலைவர்கள், கல்விமான்கள் என சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் MH ஜிப்ரி (மதனி)BA அவா்களினால் வரவேற்புரை மற்றும் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன் தலைமை உரை காத்தான்குடி ஜம்இய்யத்தல் உலமா தலைவா் மௌலவி SM அலியார்(பலாஹி) அவா்களினால் நிகழ்தப்பட்டது.
மேற்படி கல்லுாரி தொடர்பாக தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் அறபு பீடாதிபதியும், காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவருமான அஷ்ஷெய்க் AM.அலியார்(றியாழி)MA அவா்களினால் விளக்கமளிக்கப்பட்டது. உலமாக்களுக்கான பல்கலை கழக உருவாக்கம் என்பது மறைந்த அமைச்சர்களான ACS ஹமீட்,மர்ஹூம் MHM அஷ்ரப் போன்றவா்களின் சிந்தனையில் உருவானவைதான். ஆனால் அன்று அவா்களால் அமுல்படுத்த சாத்தியம் இல்லாது போய் விட்டது. ஆனால் அது இன்று எமது கௌரவ பிரதி அமைச்சர் MLAM-ஹிஸ்புல்லாஹ் MA/MP அவர்களின் அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளதினை பார்த்து நாம் மிக சந்தோசமடைகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இப்பல்கலைக் கழகமானது நுாறு வீதம் உலமாக்களுக்கு உருவாக்கப்பட்டதே ஆகும். உயா்தர பரீட்சையில் சித்தி அடைந்திருந்தால் போதும். இரண்டு வகையான Diploma வினை தொடர முடியும் ஒன்று சரீஆ மற்றது தொழில்நுட்பத்துறை ஆகும் என்றார்.
பிரதி அமைச்சர் MLAM-ஹிஸ்புல்லாஹ் MA/MP உரை,
உலமாக்கள் அவா்களுடைய பணிகளை செய்வதோடு எதிர்காலங்களில் இவ்வாறான பல்கலை கழகத்தில் இனைந்து படிப்பதன் மூலம் உயர் தகைமைகளை அடைய முடியும். இப்பல்கலை கழகத்தில் கற்க இருக்கும் உலமாக்களுக்கு நுாறு வீதம் இலவசமாக கற்பிக்கப்பட இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை ஹிறா பவுண்டேஸன் மேற் கொண்டு வருகின்றது.
இப் பல்கலை கழகத்திற்கான நிரந்தர கட்டிடம் றெஜிதனையில் சுமார் 50 ஏக்கரில் பல மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கின்றது. அவ்வாறு அமையப் பெறும் போது அங்கு மாணவா்கள் தங்கி கல்வி கற்பதற்கு சுமார் 1500 மாணவா்கள் அனுமதிப்படுவா்.
எதிர் வரும் மார்ச் மாதம் அளவில் ஆரம்பிக்கப்பட உள்ள இப்பல்கலைக் கழகமானது தற்காலிகமாக காத்தான்குடியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பட்ட மாணவா்களுடன் இயங்கும் என்றார்.
இப்பல்கலைக் கழகம் தொடர்பான சந்தேகம், கேள்விகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் MF.முகம்மது சிப்லி அவா்களினால் விளக்கமளிப்பட்டது.
இப்பல்கலை கழகம் தொடர்பான மேலதிக தகவல்கள், விண்ணப்பங்களை பெற விரும்புவோர் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
TP-0652248333 Email-ucobco@gmail.com
Post a Comment