பேஸ்புக் காரணமாக மற்றுமொரு மாணவி தற்கொலை - குருணாகலில் சம்பவம்
பேஸ்புக் காரணமாக மற்றுமொரு மாணவி இலங்கையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தள பயன்பாடு காரணமாக அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
பொல்பித்திகம தேசிய பாடசாலையில் கல்வி கற்றுவரும் 16 வயதான கனேசிகா ரணதுங்க என்ற மாணவியே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி, பெறுபேறு வரும் வரையில் குறித்த மாணவி காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
செல்லிடப்பேசியில் காதலனுடன் பேஸ்புக் மூலம் உரையாடிக் கொண்டிருந்த போது, மாணவியின் தாய் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் தாயுடன் கோபித்துக் கொண்ட குறித்த மாணவி, தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
Post a Comment