Header Ads



ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளரும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளருமான ஹ ஓ லியாங் சூ நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துரையாடினார்.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவும், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர். 

கலந்துரையாடலையடுத்து ஜனாதிபதியும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளரும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளருமான ஹ ஓ லியாங் சூவும்  அலரி மாளிகைக்கு வந்திருந்த பாடசாலை மாணவர்களுடன் குழுப்படமும் எடுத்துக் கொண்டனர்.



No comments

Powered by Blogger.