Header Ads



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர் எஸ்.பி.க்கு வழங்கியுள்ள உத்தரவு

உரிய தரப்பின் அனுமதி இன்றி தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பட்டங்களை வழங்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார். 

தனியார் பல்கலைக்கழகங்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டங்களை வழங்குவதற்கு அது தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க சபைகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் அதனை ரத்து செய்யும் வகையில், தனியார் பல்கலைக்கழகங்கள் அனுமதி இன்றி பட்டங்களை வழங்க முடியும் என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவினால், வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்கம், இலங்கை மருத்துவ சபை, பொறியியலாளர்கள் நிறுவகம் போன்றவை எதிர்ப்பை வெளியிட்டிருந்தததைத் தொடர்ந்து, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இந்த வர்த்தமானியை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.