Header Ads



கல்முனை சாஹிறா தேசிய பாட சாலையில் ஆபத்து நிறைந்த கட்டிடம் (படங்கள் இணைப்பு)


(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை சாஹிறா தேசிய பாட சாலையில் ஆபத்து நிறைந்த கட்டிடமாக உள்ள இந்த கட்டிடம் அகற்றப்படுவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

கடந்த சுனாமி அனர்த்தம் காரணமாக சேதமான  இந்த மூன்று மாடிக்கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு  இக்கட்டிடம் அமைந்துள்ள பிரதேசம் ஆபத்து நிறைந்த பிரதேசமாகவே காணப்படுகின்றது.

மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்டவர்கள்  உடனடியாக இக்கட்டிடத்தை இடித்தகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



No comments

Powered by Blogger.