பொது பல சேனாவில் குழப்பம் - ஞானசார தேரர் பணத்திற்காக செயற்படுகிறார்..!
சிங்கள பௌத்த இயக்கமான பொதுபல சேனா இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிலரது உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இயக்கத்தின் நோக்கங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்ட எட்டு பௌத்த பிக்குகள் இவ்வாறு உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நீக்கப்பட்ட எட்டு பௌத்த பிக்குகளும் காவி உடையை துறக்கப் போவதாக எச்சரித்துள்ளனர். தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், காவி உடையை துறக்கப் போவதாக தெரிவித்துள்னர். மேலும், காவி உடையைத் துறந்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக குறித்த எட்டு பௌத்த பிக்குகளும் தெரிவித்துள்ளனர்.
இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், தனிப்பட்ட குரோதம் காரணமாக தம்மை பழிவாங்கி வருவதாக உறுப்புரிமை நீக்கப்பட்ட பௌத்த பிக்குகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எந்தவொரு விஹாரையிலும் தமக்கு தங்க இடம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கலபொடத்தே ஞானசார தேரர் பணத்திற்காக இவ்வாறன செயல்களில் ஈடுபடுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பாதிக்கப்பட்டதாக மெலவ்வே கல்யானதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
மாஷா அல்லாஹ்....இறைவனின் ஏற்பாடுகள் இவை.இன்னும் இதைப்போல் பல நூறு நடக்கும்,இப்படியான இயக்கங்களே இல்லாமல் ஒழிந்தும் விடும்.அன்று ராவயாவுக்கு நல்ல பாடம் கிடைத்தது.சிவிலில் வந்த போலிசுகளே அவர்களை கடுமையாக தாக்கியதாக ராவய கூறியது.மேலும் போராட்ட இருதி நாளன்று மிகப்பெரும் 3 பிக்குகள் வைத்தியச்சலையில் சிகிச்சைக்காக(சரியான அடியால் உடம்பு புண்ணாகி விட்டது)அனுமதிக்கப்பட்டதும் தெறிந்ததே.நன்றி ஜப்னா முஸ்லிம்.
ReplyDeleteசகோ. சாஜஹான். உங்களு; கருத்துகளை வெளியிட முன்பு கன்கு சிந்தித்து வெளியிடுங்கள். பகைவர்களையும் முறையாக விமர்சியுங்கள். பிரச்சினைகளைத் தூண்டும் வார்த்தைகளைத் தவிருங்கள்.
ReplyDelete