ஜனாதிபதி கலந்துகொள்ளும் கூட்டத்தில் வெடி குண்டுள்ளதாக முஸ்லிம் பாடசாலையிலிருந்து மொட்டை கடிதம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள உள்ள வைபவம் ஒன்றில் குண்டு வெடிக்கப்பட உள்ளதாக கிடைத்துள்ள மொட்டை கடிதம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளைய தினம் புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் திறப்பு விழாக்கள் நடைபெறவுள்ளன.
புத்தளம் சஹிரா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதய விஞ்ஞானக் கூடம் திறந்து வைக்கப்பட உள்ளது.
சஹிரா கல்லூரியில் நடைபெறும் இந்த திறப்பு விழா நிகழ்வில் குண்டு வைக்கப்பட உள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு நேற்று கிடைத்த கடிதம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் அதற்கு பழித்தீர்க்கும் வகையில் இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டு சாஹிரா கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் குண்டு பொருத்தப்பட உள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
புத்தளம் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இந்த கடிதத்தை மதுரங்குளி - கடையாமட்டை முஸ்லிம் பாடசாலையில் 13 ஆம் ஆண்டில் பயிலும் மாணவர் ஒருவரே எழுதியிருப்பதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த மாணவர் தமிழ் மாணவர் எனவும் அவர் கடையாமட்டை முஸ்லிம் பாடசாலையில் 13 ஆம் ஆண்டில் பயின்று வருவதுடன் பாடசாலையின் மாணவர் தலைவராகவும் இருந்து வருகிறார்.
அப்பாவியான இந்த மாணவர் தமிழர் என்ற போதிலும் முஸ்லிம் பாடசாலை ஒன்றின் மாணவர் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதால் ஏனைய முஸ்லிம் மாணவர்கள் அவருடன் கோபத்தில் இருந்து வருவதாக புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த பாடசாலையில் பயிலும் வேறு மூன்று மாணவர்களே இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். குறித்த மாணவர்கள் அவர்களின் வீடுகளில் இல்லாத நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
பாடசாலையின் மாணவர் தலைவர் பெயரில் எழுதிய மொட்டை கடிதமே பொலிஸாருக்கு கிடைத்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புத்தளம் பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முஸ்லிம்களுக்கெதிரான கூட்டத்தின் சதி....
ReplyDeleteTheway illaza muttal weylai.
ReplyDelete