Header Ads



அமெரிக்கா எங்களுடன் மறைமுகமாக பேசுகிறது - தலிபான்கள் தகவல்


(Thoo) தலிபான்கள் வசம் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரியை விடுவிக்க தங்களுடன் அமெரிக்கா மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது என்று தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவ வீரர் பெர்க்டாலை விடுவிக்கும் வரை தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் இதுகுறித்து தலிபான்களின் மூத்த தலைவர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் வியாழக்கிழமை கூறுகையில், பெர்க்டாலை விடுவிப்பதற்கு பதிலாக அந்நாட்டு குவாண்டனாமோ சிறையில் இருக்கும் 5 மூத்த தலிபான் நிர்வாகிகளை விடுவிப்பது குறித்து எங்களிடம், அமெரிக்க அரசு மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், “தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுவது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. குவாண்டனாமோ சிறையில் உள்ள தலிபான்களை விடுவிப்பது தொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது’ என்றார்.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் 2009-ஆம் ஆண்டு தலிபான்களால் பெர்க்டால் கடத்தப்பட்டார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெர்க்டால் உயிருடன் உள்ள வீடியோ பதிவை கடந்த டிசம்பர் மாதம் தலிபான்கள் வெளியிட்டனர்.

No comments

Powered by Blogger.