மனைவி தேர்தலில் நிற்க, வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடருவேன்
தமது மனைவிக்கு மேல் மாகாணசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும் தாம் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலை தொடரப் போவதாக கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
முஸம்மிலின் மனைவி பெரோஸா மேல்மாகாணசபை தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் அந்தக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழுவில் இருந்து வெளியேறினார். எனினும் வேறு கட்சியில் இணையப்போவதில்லை என்றும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாகவும் பெரோஸா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையிலேயே தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடரப்போவதாக முஸம்மில் தெரிவித்துள்ளார்.
விரும்பியோ விரும்பாலோ... இருந்துதான் ஆக வேண்டும்!!!1
ReplyDelete