அல்லாஹ்வின் அளப்பெரிய கருணை - எனது கால்களுக்கு சக்தி மீண்டும் கிடைத்தது
(Thoo) இஸ்ரேலின் கொடூர குண்டுவீச்சில் காலின் சலன சக்தியை இழந்த ஹதீல் நஸ்மி அல் நஜ்ஜார் என்று சிறுமிக்கு பல ஆண்டுகளாக தொடரும் சிகிட்சைக்கு பிறகு சொந்த காலில் நடக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு ஏழு வயதாக இருக்கும்போது ஹதீலுக்கு காஸ்ஸா முனையில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கடுமையான காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் ஹதீலின் காலின் சலன சக்தி இழக்கப்பட்டது. அன்றில் இருந்து ஹதீல் வீல் செயரை நம்பியுள்ளார்.
வெள்ளை பாஸ்பரஸ் உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் அடங்கிய குண்டுவீச்சைத் தொடர்ந்து ஹதீலின் கால் இயங்கும் சக்தியை இழந்தது. பல வருடங்களாக கத்தரின் ஹமத் மெடிக்கல் கார்ப்பரேசனில் அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிட்சையின்பலனாக தற்போது சொந்தக் காலில் நிற்கும் நிலையை ஹதீல் எட்டியுள்ளார். கத்தரில் உள்ள அறக்கட்டளையான அல் அஸ்மக் ஃபவுண்டேசன், ஹதீலின் சிகிட்சை செலவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுக்குறித்து ஹதீல் கூறியது:”
அல்லாஹ்வின் அளப்பெரிய கருணையினாலும் மருத்துவமனை மருத்துவர்களின் கடின முயற்சியாலும் எனது கால்களுக்கு சலன சக்தி மீண்டும் கிடைத்துள்ளது. எங்கள் வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாயின் அருகில் இருந்த நான் பயந்து கீழே விழுந்துவிட்டேன். அன்று எனக்கு ஏழு வயதாகும். அன்று முதல் பல சிகிட்சைகளை நான் பெற்று வந்தேன். பல அமைப்புகளும் சிகிட்சைக்கான பொறுப்பை ஏற்றன. காலின் சலன சக்தி திரும்ப கிடைக்கவேண்டுமானால் அதற்கு அதிக செலவாகும் நவீன வசதிகள் அடங்கிய மருத்துவமனையை சார்ந்திருக்கவேண்டும்.
இவ்வேளையில் அஸ்மக் ஃபவுண்டேசன், கத்தரில் ஹமத் மெடிக்கல் கார்ப்பரேசனில் சிகிட்சைக்கான வசதியை ஏற்படுத்தி தந்ததோடு முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டது. இன்ஷா அல்லாஹ்(அல்லாஹ் நாடினால்) வரும் நாட்களில் எனது சொந்தக் கால்களில் என்னால் நிற்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.” என்றார்.
Post a Comment