ரியாத் தஃவா நிலையத்தில் மாதாந்த தஃவா நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)
(தகவல்: ரியாதிலிருந்து அபூ ஸஃத் முஆஸ்)
அல்லாஹ்வின் அருளால் நேற்று (30.03.1435) வெள்ளிக்கிழமை மாலை ரியாதிலுள்ள ரௌழா தஃவா நிலையத்தில் தமிழ் பேசும் குடும்பங்களுக்கான மாதாந்த தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை உரையை மேற்படி த.ஃவா நிலையத்தின் சிங்களப் பிரிவு அழைப்பாளர் மௌலவி ஹிஜாஸ் (அப்பாஸி) அவர்கள் நிகழ்த்தினார். அவர் தமதுரையில் நபி (ஸல்) அவர்களோடு அதி நேசத்துடன் தம் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்ட அபூபக்ர் (ரழி) அவர்கள் எந்தளவு பேணுதலுள்ளவர்களாக வாழ்ந்தார்கள் என்பதை விளக்கினார். மேலும் ''மறுமையில் எட்டு சுவனவாசல்களிலிருந்தும் வருக வருக என அழைக்கப்படும் அதி உயர் சிறப்பைப் பெற்றவரும்இ இந்த உலக மக்கள் அனைவரினது ஈமானை விடவும் அவர்களது ஈமானே கணமானது'' எனவும் ஹதீஸகளை மேற்கோள்காட்டிக் குறிப்பிட்டார்.
அவரது உரையைத் தொடர்ந்து மஃறிப் தொழுகை நிறைவேற்றப்பட்டது.
தொழுகையை அடுத்து ரௌழா தஃவா நிலையத்தின் தமிழ்ப் பிரிவு அழைப்பாளர் மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) அவர்கள் தமது உரையைத் ஆரம்பித்தார். '' உலகில் மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் சொத்து செல்வங்கள் மூலம் மனிதன் சோதிக்கப்படுகின்றான்'' என்ற தலைப்பில் அவரது உரை இடம்பெற்றது. அவர் தமதுரையில் உலகில் மக்கள் வியக்குமளவு சொத்து செல்வங்களைப் பெற்றிருந்தும் அல்லாஹ்வை மறந்து தனது அறிவின் மூலமே இவைகளைப் பெற்றதாகக் கூறி மமதையோடு வாழ்ந்த காரூனையும்இ அவனது சொத்துக்களையும் பூமி விழுங்கும்படி செய்த செய்தியை அல்குர்ஆனிலிருந்து முன்வைத்தார். மேலும் ஸுரா கஹ்பில் இடம்பெற்றுள்ள இரண்டு மனிதர்களில் ஒருவருக்கு திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக்கொடுத்துஇ பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழச் செய்துஇ அவ்விரண்டிற்கும் இடையில் விவசாயத்தையும் வழங்கி அவை இரண்டுக்கும் மத்தியில் நீரோடை ஒன்றை ஓடச் செய்தபோதும் பெருமையின் காரணமாக அல்லாஹ்வை மறந்ததால் அவனுக்கு நேர்ந்த கதி பற்றிய சம்பவத்தையும் விளக்கிக் கூறினார்.
அதன் பின்பு கலந்து கொண்ட ஆண்கள், பெண்களிடம் சில வினாக்கள் வினவப்பட்டு சரியான பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இஷhத் தொழுகையை அடுத்து நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுபெற்றன.
Post a Comment