குவைத்தில் இலங்கை பெண் மீது வல்லுறவு
(adt)தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி இலங்கை பெண் ஒருவர் குவைத் - ஹவாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனக்கு வெளிநாட்டில் வேலை பெற்றுத் தர உதவிய அலுவலகத்தில் உள்ளவரே தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் நாடு கடத்துவதாக சந்தேகநபர் தன்னை அச்சுறுத்தியதாக பெண் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படடுள்ளது.
Post a Comment