ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக சகல முஸ்லிம் நாடுகளும் ஒன்றுபடுகின்றன
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா இந்தமுறை கொண்டு வரும் தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரிக்கும் என்று உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.
இந்தியாவும் கூட சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்கும் என்றும், சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்கும்படி தாம் தொடர்ந்து பரப்புரைகளை முன்னெடுப்பதாகவும், உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு எதிராக, செக்குடியரசு, எஸ்தோனியா, மொன்ரெனிக்ரோ, ருமேனியா, ஒஸ்ரியா, பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, பிரித்தானியா, அமெரிக்கா, தென்கொரியா, இந்தயா, பெரு, ஆர்ஜென்ரீனா, பிறேசில், சிலி, கோஸ்டாரிக்கா, சியரலியோன், ஐவரிகோஸ்ட், பெனின், மெக்சிகோ, மசிடோனியா ஆகிய 23 நாடுகள் வாக்களிக்கும்.
நாம் தொடர்ந்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் தலைநகரங்களுடன் தொடர்புகளை வைத்துளோம்.
எதிர்காலத்தில், நடுநிலையாளர்களாகத் தாம் பங்கேற்பதானால், தாம் நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக தென்னாபிரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கலாம்.
ஆனால், 201ல் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளியான போது, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ், அனைத்துலக விசாரணைக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
வரலாற்று பின்னணியின் அடிப்படையிலும், அண்மைய நிலவரங்களின் அடிப்படையிலும், சிறிலங்காவுக்கு ஆதரவாக, 13நாடுகள், அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கலாம் என்று கருதப்படுகிறது.
ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்னாம், குவைத், மாலைதீவு, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சீனா, கொங்கோ, கியூபா, வெனிசுவேலா ஆகிய நாடுகளே அவையாகும்.
ஜப்பான், கசாக்ஸ்தான், கென்யா, எதியோப்பியா, பொட்ஸ்வானா, புர்கினாபாசோ, காபோன் உள்ளிட்ட 8 நாடுகள் வாக்கெடுப்பின் போது நடுநிலை வகிக்கும் என்றும், இரண்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது என்றும் உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
Post a Comment