மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளராக டாக்டர் இப்ராலெப்பை நியமனம்
(யு.எல்.எம். றியாஸ்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் எம்.எஸ். இப்ராலெப்பை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுள்ளார்.
இவ் இடமாற்றத்தை அடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமையின் புதிய பணிப்பாளராக கிழக்கு மாகான சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிரதி மாகான சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் ஏ.எல்.எம். அலாவுதீன் தனது கடமைகளை நேற்று வெள்ளிக்கிழமை (22.02.2014) பொறுப்பேற்றார்.
வாழ்த்துக்கள்
ReplyDelete