வேகமாக சென்ற வாசிம் அக்ரமுக்கு அபராதம்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுக்கு போக்குவரத்து விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாசிம் அக்ரம் தனது காரில் 78 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளார் அதனை அடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து கண்காணிப்பாளர் ஒருவர் அக்ரமின் காரை தடுத்து நிறுத்தி,”இந்த சாலையில் 60 கி.மீ. வேகத்தில் மட்டுமே காரை ஓட்ட வேண்டும் நீங்கள் அதை மீறியதால் அபராதம் கட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வாசிம் அக்ரம் அவரிடம் வாக்குவாதம் எதுவும் செய்யாமல் அபராத தொகையை செலுத்தி விட்டு சென்றுள்ளார்.
Post a Comment