பொதுபல சேனா ஏன் அமைதியாக உள்ளது..? விளக்குகிறார் ஞானசார தேரர்..!
பொதுநலவாய நாடுகளின் மாநாடு காரணமாக கடந்த காலங்களில் அமைதியாக இருந்தாகவும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் காரணமாக தற்பொழுது அமைதியாக இருப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டுக்கும், இனத்திற்கும், பௌத்த சாசனத்திற்கும் ஏற்படும் அநீதிக்கு முன்னால் தொடர்ந்தும் வாய்யை மூடிக் கொண்டிருக்க முடியாது எனவும் சிங்களவர்கள் அதளபாதாளத்தில் விழுந்து கிடந்தாலும் நாட்டின் தலைவர்கள் அது பற்றி கவனத்தில் எடுப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மேல் மட்டத்தில் முறையிட்டதும் சில வீண்பேச்சு மன்னர்கள் எம்மை ஒதுக்கி வைக்க முயற்சித்தனர். நாட்டில் நடக்கும் அநீதிகளை பேசினால் ஜெனிவாவில் நாங்கள் தோற்று விடுவோம் என்கின்றனர்.
நாட்டில் இன்று நடப்பவைகள் இவர்களின் கண்களுக்கு புலப்படாது. வாக்கும், தேர்தலும் மட்டுமே இவர்களுக்கு தேவைப்படுகிறது.
இறுதியில் பொதுபல சேனாவின் செயற்பாடுகள் காரணமாகவே ஜெனிவாவில் தோல்வி ஏற்பட்டது என கூற தொடங்கினர் என்றார்.
Post a Comment