மடவளை மதீனா மத்திய கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி (படங்கள்)
மடவளை மதீனா மத்திய கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் மல்வா இல்லம் முதலாம் இடத்தைப் பெற்றது.
(6.2.2014) மேற்படி விளையாட்டுப் போட்டியில் 544 புள்ளிகளைப் பெற்று மர்வா இல்லம் முதலாம் இடத்தையும் 485 புள்ளிகளைப் பெற்று மினா இல்லம் இரண்டாம் இடத்தையும் 426 புள்ளிகளைப் பெற்ற சபா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் ஹிரா இல்லம் 393 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பெற்றது.
இவ் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு வைபவத்தில் வத்தேகம கோட்ட கல்வி அதிகாரி பி.ஜே.கே. முத்துகுமாரன பிரதம அதிதியாகவும் வத்துகாமம் மக்கள் வங்கியின் முகாமையாளர் திருமதி கே.விஜேதுங்க சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
உரையாற்றிய பிரதம அதிதி தெரிவித்ததாவது,
போட்டி ஒன்றில் பங்கு கொள்ளும் சகலராலும் வெற்றி பெற முடியாது. ஆனால் வெற்றியைப் போலவே தோல்வியையும் மதிக்கும் போது அது வெற்றியாக அமைக்கிறது. அதனாற்தான் இவ்வாறான போட்டிகள ஒழுங்கு செய்யப் படுகின்றன. எனவே வெற்றியை விட எமது இலக்கு நாம் அதில் பங்கு கொள்வதாக இருகக வேண்டும். போட்டியில் பங்கு கொண்டு தோல்வி அடைபவன் போட்யிடாமல் இருப்பவனை விட பன் மடங்கு கோழையாகும். ஏனென்ரால் பெருந்தொகை ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஒருவனால் தனது தோல்வியைத் தாங்கிக் கொள்ள அவனுக்கு சாதாரண மன தைரியம் போதாது. ஆவனிடம் உயர்ந்த குனப் பண்புகள் இருந்தால் மட்டுnமு அவனது மனதை தேற்றி இறுதிவரை போட்டி இடவேண்டி வரும்.
வேற்றி பெறுபவனைப் பலரும் பாராட்டுவர். ஆவனால் வெற்றி பெறுவது சுலபம். ஆனால் தோல்வி அடைபவனுக்கு தனது மனதை வெல்லும் ஆற்றல் இருக்க வேண்டும். எனவே தோல்வி அடைபவனையே நான் மனமாறப் பாராட்டுவேன் என்றார்.
இவ்வைபவத்தில் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்ட மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ள பரிபாலன சபைத் தலைவர் ஏ.டப்ளியு.எம்.நாஜிம், மதீனா தேசிய பாடசாலை அதிபர் செல்வி நூருல் ஹிதாயா, மடவளை அல்முனவ்வரா ஆரம்பப் பாடசாலை அதிபர் ஜே.பவுசுர் றஹ்மான், மதீனா பிரதி அதிபர் ஏ.எம்.முஹாரிஸ் மடவளை இலங்கை வங்கி மற்றும் வத்துகாமம் மக்கள் வங்கி எனப்வற்றின் முகாமையாளர்கள் உற்பட மற்றும் அதிதிகள் பரிசில்களை வழங்கினர்.
Post a Comment