அமெரிக்காவில் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் சுசன்னா பாசோ (வயது 59). இவரது ஆண் நண்பர் லூயிஸ் முசோ (59).
லூயிஸ் முசோ இன்சுரன்ஸ் திட்டங்களில் சேர்ந்து இருந்தார். அவருடைய பணத்தை அபகரிக்க சுசன்னா பாசோ திட்டமிட்டார். இதற்காக லூயிஸ் முசோவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்தார்.
இந்த நிலையில் அவர் லூயிஸ் முசோவை கொலை செய்து சாக்கடை கால்வாய்க்குள் வீசினார். ஆனால் லூயிஸ் முசோவை சுசன்னா பாசோ கொலை செய்ததை போலீசார் கண்டுபிடித்து விட்டனர். அவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. மரண தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் விசாரணை நடந்து வந்தது.
சுசன்னா பாசோ மனநிலை பாதிக்கப்பட்டு கொலை செய்துவிட்டார் என்று அவரது வக்கீல் வாதாடினார். ஆனால் கோர்ட்டு அதை ஏற்றுக் கொள்ள வில்லை. இதையடுத்து இன்று சுசன்னா பாசோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. விஷ ஊசி போட்டு அவரை கொன்றார்கள்.
அமெரிக்காவில் 3100 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டு சாவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இவர்களில் 60 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1976–க்கு பிறகு இதுவரை 1400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 14–வது பெண் சுசன்னா பாசோ ஆவார்.
Post a Comment