Header Ads



யாழ்ப்பாணம் கதீஜா பெண்கள் பாடசாலையை மீள திருத்தியமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்



யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்.கதீஜா பெண்கள் பாடசாலையை மீள திருத்தியமைக்க வட மாகாண கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாக யாழ் மாநகர சபை உறுப்பினரும் மக்கள் பணிமனை தலைவருமான பி.எஸ்.எம் சுபியான் மௌலவி தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த யுத்த காலத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு தற்போது மீளக்குடியேறிய அகதிகள் சிலர் தங்கியுள்ள கதீஜா பெண்கள் பாடசாலையை மீள இயங்க வைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு மன்னர் வட மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவினை அவரது அமைச்சு அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்தரையாடினேன்.

ஒன்றரை மணித்தியாலங்களாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இப்பாடசாலையின் மீள் கட்டுமானத்தினை  துரிதப்படுத்தலும்,மீளக்கட்டமைக்கப்படும் பாடசாலையை இயங்க வைக்க தேவையான ஆலோசனைகளை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில்  அமைச்சருடன் பேசினேன்.

இந்தவகையில் அமைச்சரும் மேற்படி பாடசாலையின் கட்டுமானத்தை துரிதப்படுத்த ஆவணசெய்வதாகவும்,தொடர்ந்து அப்பாடசாலையை இயங்க வைக்க ஒரு நாள் மக்கள் சந்திப்பொன்றை  ஏற்பாடு செய்ய ஒழுங்ககளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

இதன்படி பாடசாலை மீள இயங்க பொதுமக்களின் அபிப்பிராயங்கள் கேட்கப்பட்ட பின்னர் தான் முடிவு எடுக்கப்படும் எனவும்,தற்போது அப்பாடசாலையை மீள இயங்க நடவடிக்கை எடுப்பதாக ஒரு குழு அமைக்கப்பட்டு மறைமுகமாக எடுக்கப்படும் முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

மேற்படி பாடசாலையை மீள கட்டியெழுப்ப வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் தலைமையில் மற்றுமொரு முயற்சி மெற்கொள்ளப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.(பா.சிகான்)

No comments

Powered by Blogger.