இந்தியாவிற்கான விசா விண்ணப்பங்கள் பெற்றுக் கொடுப்பதாக சில போலி அமைப்புக்கள்
(JM.Hafeez)
இந்தியாவிற்கான விசா விண்ணப்பங்கள் பெற்றுக் கொடுப்பதாக சில போலி அமைப்புக்கள் நிதி மோசடிகளில் ஈடுபடுவதாகவும் அவ்வாறு எவரும் ஏமாற வேண்டாம் என்று கண்டியிலுள்ள உதவி இந்தியத் தூதுவராலயம் அறிவித்துள்ளது.
பல போலி இணைய முகவரிகளை வைத்து பொது மக்களிடமிருந்து விசா விண்ணப் பங்களுக்கு நிதி சேகரித்துள்ளதாகவும் அப்படி யாரும் ஏமாற்ற மடைந்தால் அதற்கு தாம் பொறுப்பல்ல என்று கண்டியிலுள்ள இந்திய உதவித்தூதுவராலயம் அறிவித்துள்ளது.
அப்படி ஒன்லைன் மூலமாக விசா விண்ணப்பங்கள் பெறத் தேவையானவர்கள் தமது உத்தியோக பூர்வ இணைய முகவரியான indionvisaonline.gov.in என்ற முகவரியுடன் தொடாபுகளைப் பேணுவதுடன் அதன் பிறகு IVS Goloble Ltd, 281, D.S. Senanayaka Street, Kandy என்ற முகவரியில் உள்ள முகவர் நிறுவனத்துடன் தொடர்புகளைப் பேணமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment