Header Ads



பொதுப் போக்குவரத்துப் பயணிகளின் கோரிக்கை

(எம்.எம்.ஏ.ஸமட்)

பொதுப் போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் யாசகம் செய்வோர் மற்றும் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுப் போக்குவரத்துப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து பயணிகள் தெரிவிப்பதாவது,

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற தனியார். இ.போ.ச பஸ்கள் மற்றும் ரயில்களில் யாசம் செய்வோரினாலும் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரினாலும் பிரயாணத்தில் அசௌகரியம் ஏற்படுத்தப்படுகிறது. 

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் யாகம் செய்வது மற்றும் விற்பனையில் ஈடுபடுது தடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் நடவடிக்கையில் அசமந்தப்போக்கு காணப்படுவதன் நிமித்தம் யாசகர்களினதும் சிறு வியாபரிகளினதும் இந்நடவடிக்கைள் பொதுப்போக்குவரத்து பஸ்களிலும் ரயில்களிலும் அதிகரித்துள்ளதாக பிரயாணிகள் குறிப்பிடுகின்றனர். 

இவற்றைக் கருத்திற்கொண்டு, குறித்த இந்நடவடிக்கைகளை தடை செய்து பயணிகளின் அசௌகரியத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைப்பதாக பயணிகள் குறிப்பிடுகின்றனா.

இதேவேளை, கொழும்பு நகர் வீதிகளில் யாசகம் செய்த 33 யாசகர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை, மருதானை, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம் மற்றும் கொம்பனி வீதிப் பிரதேசங்களில் யாசகத்தில் ஈடுபட்ட யாசகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 26 ஆண்களும் 7 பெண்களும் உள்ளமை  குறிப்பிடத்தக்கது,

No comments

Powered by Blogger.