இலங்கையில் வெப்பமான காலநிலை தொடரும்
இலங்கையில் வெப்பமான காலநிலை மார்ச் மாதத்தின் நடுப்பகுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி வர்ணசூரிய தெரிவித்தார்.
கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் பூகோள காலநிலை மாற்றத்தால் குறைவான மழைவீழ்ச்சியே காணப்பட்டது. அதனால் இந்த வருடம் நாட்டில் அதிக வெப்பமான காலநிலை காணப்படும்.
சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனங்களின் ஆய்வுகள் 2014ம் ஆண்டு முழுவதும் வறட்சியான காலநிலை நிலவும் என எதிர்வு கூறியுள்ளன. மேலும் எல் நினோ மாற்றம் பசிபிக் பகுதி முழுவதும் வானிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே பசிபிக்கின் மத்திய மற்றும் கிழக்கு பகுதி அதிகமாக வெப்பத்தால் பாதிக்கப்படும். எனவே இந்த ஆண்டு இலங்கையில் அதிகமான வறட்சி காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment