மன்னர் பைசால் சர்வதேச விருதிற்கான விண்ணப்பங்கள் கோரல்
மன்னர் பைசால் சர்வதேச விருதிற்கான நபர்கனை இலங்கை உட்பட உலக நாடுகளிலிருந்து சிபாரிசு செய்யுமாறு சவூதி அரேபியாவிலுள்ள மன்னர் பைசால் மன்றம் அறிவித்துள்ளது.
இஸ்லாத்திற்கான சேவை, இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி மற்றும் இலக்கியம், மருத்துவம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இந்த விருது வழங்கப்படுகின்றது.
இந்த விருத்திற்கான நபர்களை உலகிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள், நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முன்மொழிய முடியும். ஆண், பெண் என்ற வேறுபோடா இஸ்லாமியர் கிறுஸ்தவர், பௌத்தர், இந்து என்ற வேறுபாடின்றி இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் சேவையாற்றியவர்கள் மற்றும் நிறுவனங்ககளை இந்த விருதிற்கான முன்மொழிய முடியும்.
எனினும் தனி நபர்களினாலோ அல்லது அரசியல் கட்சிகளினாலோ விருதிற்காக மேற்கொள்ளப்படும் முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 35 வருடங்களாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை பாகிஸ்தான், பலஸ்தீனம், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் குவைத் உள்ளிட்ட 41 நாடுகளை சேர்ந்த 234 பேர் பெற்றுள்ளனர்.
எவ்வாறாயினும் இலங்கையை சேர்ந்த எவரும் இந்த விருதிற்காக தெரிவு செய்ப்படவில்லை. இதனால் மன்னர் பைசால் சர்வதேச விருது தொடர்பில் வழிப்புணர்வுட்டும் நடவடிக்கையினை கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலய கலாசார பிரிவு மேற்கொண்டுள்ளது.
இந்த விருது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பங்கள் தேவைப்படுவோர் www.kfip.org என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளமுடியும்.
இந்த விருதிற்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு திவானி கையெழுத்து சான்றிதல், 200 கிராம் நிறையுடைய 24 கரட் தங்கப் பதக்கம் மற்றும் 200,000 அமெரிக்க டொலர் பணம் ஆகியன பரிசாக வழங்கப்படுகின்றன.
மன்னர் பைசால் விருது பெற்றவர்களில் 16 பேர் நோபல் பரிசுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment