Header Ads



முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ரத்து செய்யும் மனு - விளக்கமளிக்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அரச காடுகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு வாசிகள் சிலர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். 

முல்லைத்தீவு அரச காடுகளை அழித்து அந்தக் காணியில் முஸ்லிம்களை குடியமர்த்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மீள்குடியேற்ற ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக இந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை காணி சட்ட விதிகளின் பிரகாரம் அரச காணிகளை மக்களுக்கு வழங்கும் உரிமை மாவட்ட செயலாளருக்கு மட்டுமே உள்ளது என்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு காணியை பகிர்ந்தளிக்கும் அதிகாரம் இல்லை என்றும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே முல்லைத்தீவில் அரச காணிகளை பகிர்ந்தளிக்க ஜனாதிபதி ஆணைக்குழு எடுத்துள்ள முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் இந்த மனு கோருகிறது.

இந்த மனுவின் விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதியன்று நடத்த தீர்மானித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அன்றைய தினம் அரசாங்கம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என மனுவில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது

No comments

Powered by Blogger.