பெற்ற தாயை கொன்று, உடல் உறுப்புக்களை சாப்பிட்ட சகோதரர்கள்
பிலிப்பைன்ஸில் மூன்று சகோதரர்கள் தனது தாயைக் கொன்று உடல் உறுப்புக்களை உண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சடங்காக இவர்கள் இதனை செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் அம்பட்டுவான் பகுதியில் 56 வயது முஸாலா அமிர் என்பவரின் உடல் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம் குறித்த வீட்டிலிருந்து வித்தியாசமான சத்தங்கள் கேட்டதாக அண்டை வீட்டார் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
பல உறுப்புகளும் காணாமல் போன நிலையில் மோசமான சிதைவுக்கு உள் ளான உடலையே பொலிஸார் மீட்டுள்ளனர். உடலில் இருந்து இரத்தம் உறிஞ்சப்பட் டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள் ளனர். கொல்லப்பட்ட தாயின் உடல் உறுப்புக்களை அவரது மகன்மார் உண்டிருப்பதாக பொலிஸ் பரிசோதகர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் 35 வயது டுன்டா, 21 வயது மிரோய் மற்றும் 18 வயது இப்ராஹிம் ஆகிய சகோதரர்கள் தனது தாயைக் கொன்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றனர். தமது தாயை சூழ்ந்திருந்த கெட்ட ஆவியை விரட்ட தாம் முயற்சித்ததாக அந்த சகோதரர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி குடும்பத்தினரின் மோசமான மனநிலை பாதிப்பு குறித்த மருத்துவ அறிக்கையை சோதனை செய்ய பொலிஸார் திட்ட மிட்டுள்ளனர். அதே போன்று போதைப் பொருள் பயன்பாடும் இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டனர். சந்தேக நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட் டிருப்பதாக அம்பட்டுன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொனால்ட் டி லியோன் குறிப்பிட்டார்.
இந்த மூன்று சகோதரர்களும் மோரோ பழங்குடி இனத்தை சேர்ந்த முஸ்லிம்களாவர். கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் 53 பேர் படுகொலை செய்யப் பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Post a Comment