Header Ads



ஐ.தே.க. நிறைவேற்றுக் குழுவிலிருந்து பெரோஸா முஸம்மில் விலகினார்

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழுவில் இருந்து விலகுவதாக பெரோஸா முஸம்மில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் எவ்வித தொடர்பையும் வைத்திருக்கப்போவதில்லை என கடிதமொன்றின் மூலம் அவர் அறிவித்துள்ளார்.

தனது கணவர் கொழும்பு மாநகர மேயர் என்பதாலோ அல்லது அவரது வேண்டுகோளின் பேரிலோ நிறைவேற்றுக் குழுவின் அங்கத்துவம் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் அனுசரணையின்றி, காந்தா சவிய மகளிர் அமைப்பை நிறுவி, அதன்மூலம் பல்வேறு சமூக சேவைகளில் தாம் ஈடுபட்டமை தொடர்பிலும் அவர் தனது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதே கட்சி ஆதரவாளர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ள போதிலும், தலைவர் மற்றும் தலைமைத்துவ சபையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் காரணமாக கட்சி மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் அற்றுப்போவதாக பெரோஸா முஸம்மில் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை தமது சொத்தாக கருதி சிலர் செயற்படுகின்றமை, பெரும்பாலான கட்சி ஆதரவாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் எனவும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. better you stay at home and let your husband do the politics,There r many politicians and we dont need anymore. When they refused only you cry about Ranils dictataorship, very soon your hubby also would leave and join international thief mahinda and would say he is a great leader.All humbugs....

    ReplyDelete
  2. Reality is you couldn’t get nomination via UMP and now you are turning the plate…..This is one of the political drama.....Just via this I heard about "Kantha Savia"

    ReplyDelete
  3. நிச்சயமாக எதிர்க்கட்சித்தலைவர் உங்களின் தீர்மானத்தை வரவேற்பார்.......!!! அதுதான் அவரது தேவையுமாகும். ஏனென்றால் அவர்தான் ஆழும் கட்சியின் மறைமுகமான ஆதரவாலர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாச்சே! இப்படியான ஒரு எதிர்க்கட்சித்தலைவரின் கீழ் 'கட்சிக்காக' உழைப்பது என்பது முட்டாள்தனமானது.!

    ReplyDelete

Powered by Blogger.