Header Ads



பிரதேச செயலாளர்களுக்கு தேர்தல் திணைக்களத்தின் உத்தரவு

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

ஏதிர்வரும் 2014 ஜுன் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இந்த வருடத்திற்கான தேருநர் இடாப்புத்திருத்த்தின் போது வாக்கெடுப்பு மாவட்டங்களை வேறாகப்பிரிப்பதற்கும் தற்போது உள்ளடக்கப்படாத கிராமம் வீதி பாதைகள் பற்றிய விபரங்கள் தற்போது தேர்தல்கள் திணைக்களத்தினால் சேகரிக்கப்படுகின்றன.

இது பற்றிய விபரங்கள் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவு  ரீதியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன  1980இன் 44ஆம்  இலக்க தேருநர்கள் சட்டத்தின்9(3) ஆம் பிரிவின் கீழ் வேறு பிரித்தொதுக்கப்பட்ட வாக்கெடுப்பு மாவட்டங்களுக்குள் உள்வாங்கப்படாத புதிய கிராமங்களை வீதிகளை உட்சேர்த்தலும் பழைய கிராமங்களுக்கு வீதிகளுக்கு தற்போது பயன்படுத்தப்படுகின்ற  கிராமங்கள்  வீதிகளின் பெயர்களை உட்சேர்ப்பதற்கும் இதன் மூலம் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

இதன் கீழ் வாக்கெடுப்பு மாவட்டத்திற்குறிய (பிரிவு) வாக்குகளை 1500இற்குள் மட்டுப்படுத்தல் மற்றும் வாக்களிப்பு நிலையமாக பாவிக்கப்படவுள்ள கட்டடத்தின் அமைவிடம்  வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையமொன்றிற்கு வாக்களிக்கச் செல்லும் தூரத்தை 3கிலோ மீற்றருக்கும் குறைவாகக் குறைத்தல் போன்ற தகவல்களும் தற்போது சேகரிக்கப்பட்டுவருகின்றன.

இத்தகவல்கள் யாவும் அந்தந்த பிரதேச செயலாளர்கள் ஊடாக எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் அந்தந்த மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.