Header Ads



ஜம்மியத்துல் உலமா சபையும், பொத்துவில் பிரதேச சபையும் இணைந்து நடாத்திய சுதந்திர தின விழா

பொத்துவில் பிரதேச சபை மற்றும் பொத்துவில் ஜம்மியத்துல் உலமா சபையும் இணைந்து ஏற்பாடு செய்த சுதந்திர தின விழா இன்று (2014.02.04ம் திகதி) பொத்துவில் பொது நூலகத்தில் கௌரவ தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக பொத்துவில் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அறுகம்பை விசேட அதிரடிப்படை Sub Inspector, அறுகம்பை கடற்படை பொறுப்பதிகாரயும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு பொத்துவில் பிரதேச முக்கியஸ்தகர்கள் மற்றும் புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர்  இதனைத் தொடர்ந்து பொத்துவில் ஜும்மா மஸ்ஜிதில் துஆப்பிரார்தனையும் இடம்பெற்றது.



No comments

Powered by Blogger.