Header Ads



இலங்கை வரும் திட்டத்தை இறுதி நேரத்தில் கைவிட்டார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி


இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவிருந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், தனது பயணத்தை திடீரென இரத்துச் செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தியோகபூர்வ பயணத்தை இரத்துச் செய்தமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்க பல விசேட வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியுடன் இருத்தரப்பு விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தவிருந்தார்.

அத்துடன் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தனது இலங்கை விஜயத்தின் போது, இலங்கைக்கான ஆப்கான் தூதரகத்தையும் திறந்து வைக்கவிருந்தார்.

இரண்டு நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவிருந்தன. அவற்றில் ஆப்கானிஸ்தானில் இலங்கை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் உடன்படிக்கையும் அடங்கும்.

இதனை தவிர கல்வி, விளையாட்டு, சுகாதார துறைகள் சம்பந்தமான உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவிருந்தன.

No comments

Powered by Blogger.