Header Ads



மியன்மாருக்கு செல்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த மாத முற்பகுதியில் மியான்மருக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 

அடுத்தமாதம் 10ம் நாள் லண்டனில் நடக்கவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச பிரித்தானியா செல்லத் திட்டமிட்டுள்ளார். 

இந்தப் பயணத்துக்கு முன்னதாக, அவர் மியான்மருக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், மியான்மர் அங்கம் வகிக்காததால், இந்தப் பயணம் ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கம் கொண்டதல்ல என்றும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.