Header Ads



வயிற்றுக்குள் மறைத்து 9 கிலோ ஹெராயினை கடத்த முயன்ற 5 நைஜீரிய வாலிபர்கள் அபுதாபியில் கைது


வயிற்றுக்குள் ஹெராயினை மறைத்து கடத்த முயன்ற 5 நைஜீரிய வாலிபர்களை அபுதாபி விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரேசில், லாகோஸ், கானோ மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து 9.34 கிலோ ஹெராயினை அபுதாபிக்கு கடத்த முயன்ற 5 நைஜீரிய வாலிபர்கள் கடந்த 12 நாட்களில் கைது செய்யப்பட்டதாக அபுதாபி நகர குற்றப்பிரிவு காவல் துறை இயக்குனர் ரஷித் மொஹம்மத் பு ரஷித் தெரிவித்தார்.

மேற்கண்ட வாலிபர்களில் சிலர் அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய போது கடுமையான வயிற்று வலியால் துடித்ததாகவும், சிலர் சோர்வாக காணப்பட்டதாகவும், சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் வயிற்றுப்பகுதியை சோதனையிட்டு பார்த்ததில் அவர்கள் 5 பேரின் குடல் மற்றும் வயிற்றுக்குள் 441 குப்பிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ 340 கிராம் ஹெராயின் வெளியே எடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு வயிற்றுக்குள் ஹெராயினை மறைத்து கடத்தி வரும் போது 24 மணி நேரத்துக்குள் அவை வெளியேற்றப்படா விட்டால் உள்ளே இருக்கும் குப்பிகள் வெடித்து சிதறி கடத்தல்காரர்களின் உயிருக்கே ஆபத்தாகி போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.