ஆளும்கட்சி ஆதரவாளர்கள் விபத்தில் சிக்கினர் - இருவர் பலி, 8 பேர் காயம்
காலி ரத்கம பகுதியில் ஐக்கிய மக்கள் சுநதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதி, இருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment