இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு நுழைவு விசா மறுப்பு
இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் நுழைவு விசாவசதி இலங்கை உட்பட எட்டு நாடுகளுக்கு வழங்கப்படமாட்டாது என இந்தியா அறிவித்துள்ளது.
சுற்றுலா மற்றும் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் உலகின் 180 நாடுகளுக்கு இந்த வீசா முறைமை நீடிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை பாகிஸ்தான் ஈரான் ஈராக் சோமாலியா நைஜீரியா ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்த வீசா சலுகை நீடிக்கப்படவில்லை.
இதேவேளை இதுவரை காலமும் சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பதினொரு நாடுகளுக்கு மட்டுமே ஒன் அரைவல் வீசா முறைமை காணப்பட்டது.
எனினும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு 180 நாடுகளின் பிரஜைகளுக்கு (ஒன் அரைவல்) நுழைவு விசாவசதி வழங்க தீர்மானித்துள்ள இந்திய அரசாங்கம் சில மாதங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் என்ன காரணத்திற்காக இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கும் இந்த வீசா சலுகை வழங்கப்படவில்லை என்பது பற்றிய தகவல்களை இந்தியா வெளியிடவில்லை.
Post a Comment