இலங்கையின் 80 வீதமான எயிட்ஸ் நோயாளர்கள் வெளிநாடு சென்றவர்கள்
இலங்கையில் உள்ள எய்ட்ஸ் நோயாளர்களில் 80 வீதமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்று திரும்பிய பெண்கள் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தடவையாக வெளிநாடு செல்லும் பெண்கள் மேற்கொள்ளும் வைத்திய பரிசோதனையின்போதே எச்.ஐ.வி. தொற்றிய அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் நோய் ஒழிப்பு செயற்திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரையுள்ள நான்கு ஆண்டுகளில் இலங்கையில் எய்ட்ஸ் நோய் தொற்றியோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் இவ்வமைப்பின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment