Header Ads



6 மாவட்டங்களில் கால்நடை விற்பனைக்கு தடை

மிருகங்களுக்கு ஏற்படும் கால்வாய் நோய் அல்லது கோமாரி நோய் வவுனியா உட்பட ஆறு மாவட்டங்களில் உள்ள கால் நடைகளுக்கு பரவியிருப்பதனால் அம் மாவட்டங்களில் கால்நடைகளை  விற்பனை செய்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது. 

அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இந் நோய் பரவியுள்ளது.

இந்த நோயினால் பசுமாடுகள், எருமை மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் மற்றும் பன்றிகள் ஆகிய விலங்கினங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதனால், அவற்றை மறு அறிவித்தல் வரையில் உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அரசாங்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த வர்த்தமானி வெளிவந்த திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு இந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் குறித்த மாவட்டங்களில் இருந்து கால்நடைகளை வேறிடத்துக்கு கொண்டு செல்வதையும் இறைச்சிக்காக அறுக்கப்படுவதையும் தடுப்பதற்கு பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

இந்த நோய் மேலும் தொற்றிப் பரவாதிருக்க வேண்டும் என்பதே தங்களுடைய எதிர்ப்பார்ப்பு என கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் டாக்டர் ரட்நாயக்க தெரிவித்தார். 

காற்றின் மூலமாக இந்த நோய் பரவத் தொடங்கியதால் அதனை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. idu aan bodu bala seena madu mattum tane arukkaweendam anradu adu panri allaam seetru arukka weendam anru arasu solkirady innum porunga ennum erkku bodubalasenawukku idan appanana oru noy parawappokudu

    ReplyDelete

Powered by Blogger.