இலங்கையின் 66 ஆவது சுதந்திரத் தினத்திற்கு முஸ்லிம் நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து
இலங்கையின் 66ஆவது சுதந்திரத் தினத்திற்கு பல அரச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் 66ஆவது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் இலங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் மென்மேலும் மேன்மையடையும். இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார மற்றும் வணிக உறவுகள் இன்னும் அதிகமாக வளர்ச்சியடையும் நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பஹ்ரேன் பிரதமர் இளவரசர் களிப் பின் சல்மான் அலி கலிபா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டுக்கும் சுபீட்சம் பெற இச்சுதந்திர தினத்தில் வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
டுபாய் ஜனாதிபதி செயிக் கலிபா பின் செயிட் அல் நாயன்- குவைத் ராஜ்யம் சார்பாக சபாநாயகர் மர்சுக் செயிட் சானிமா ஆகியோரும் ஜனாதிபதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.
ஜோர்தான் அரசர் இரண்டாம் அப்துல்லா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இலங்கை மக்களின் அபிவிருத்திக்காகவும் ஜனாதிபதியின் நீண்ட ஆரோக்கியமான ஆயுளுக்காகவும் தாம் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
கட்டார் அரசர் ஷெயிக் தமீம பின் ஹமாட் அல் தானி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இலங்கையின் 66ஆவது சுதந்திரத் தினத்திற்கு தனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
Post a Comment