நிந்தவூரில் இடம்பெற்ற 66வது சுதந்திர தின நிகழ்வுகள் (படங்கள்)
(சுலைமான் றாபி)
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தினையொட்டி இன்று (04.02.2014) நிந்தவூரின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த வகையில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளை ஏற்பாடு செய்த பிரதான நிகழ்வு அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும், அதனைத்தொடர்ந்து நிந்தவூர் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிகழ்வு அதன் அலுவலக வளாகத்திலும், அதனைத்தொடர்ந்து நிந்தவூர் பிரதேச சபையிலும் , மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையிலும் இடம்பெற்றன.
இதேவேளை இந்த சுதந்திர நிகழ்வின் சிறப்பம்சமாக பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட சுதந்திர தின ஊர்வலமும் இந்நிகழ்வுகளை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சுதந்திரமே இல்லாத சிருபாண்மை மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமா?உங்களுக்கு சுதந்திரமில்லை என்கிற உண்மையை உலகிற்கு எடுத்து சொல்லும் அறியவாய்ப்பை தவர விட்டீர்கள்.தவரான வழினடத்தல்கள் சுய இலாபங்கள் இவைகளே சிந்திக்க தவரும் உங்களைப்போன்ற (அப்)பாவிகளை மேலும் குட்டகுட்ட குனிய வைக்கிறது.உங்கள் கவணத்தை இன்னாடும் உலகமும் ஈர்க்கும் திருனாள் இன்றே.சாமர்த்தியமாக சாமயோகிதமாக புத்தியுள்ளவர்கள் சமூக பெயர் மத தாங்கிகள் யோசித்திருந்தால்,சிறந்த முறையில் இதனை ஏற்பாடு செய்து சகல ஊடகங்களிலும் தெறியப்படுத்தியிருக்கலாம்.வாய்ப்புக்கள் எப்போதும் கதவை தட்டுவதில்லை.
ReplyDelete