6 மாவட்டங்களில் 49 சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டன
(ஏ.எல்.ஜுனைதீன்)
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் வைப்பிலிடும் இறுதித் தினமான 05 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 4.15 மணி வரை கொழும்பு கம்பஹா களுத்துறை காலி மாத்தறை அம்பாந்தோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் 49 சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டிருப்பதுடன் 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் என மொத்தமாக 55 வேட்புமனுப்பத்திரங்களையும் கையளித்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் 16 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டிருப்பதுடன் 08 அரசியல் கட்சிகளும் 05 சுயேட்சைக் குழுக்களும் என மொத்தமாக 13 வேட்புமனுப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் 09 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டிருப்பதுடன் 07 அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் என மொத்தமாக 09 வேட்புமனுப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் 10 சுயேட்சைக் குழுக்கள் கட்டுபணத்தை வைப்பிலிட்டிருப்பதுடன் 07 அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் என மொத்தமாக 09 வேட்புமனுப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தில் 05 சுயேட்சைக் குழுக்கள் கட்டுபணத்தை வைப்பிலிட்டிருப்பதுடன் 07 அரசியல் கட்சிளும் 02 சுயேட்சைக் குழுக்களும் என மொத்தமாக 09 வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்துள்ளன.
மாத்தறை மாவட்டத்தில் 05 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டிருப்பதுடன் 04 அரசியல் கட்சிகளும் 03 சுயேட்சைக் குழுக்களும் என மொத்தமாக 07 வேட்புமனுப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 04 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டிருப்பதுடன் 06 அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் என மொத்தமாக 08 வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்துள்ளன.
கட்டுப் பணம் வைப்பிலிடுதல் இன்று 2014.02.05 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்துவிட்டன. வேட்புமனு கையேற்பு நாளை 2014.02.06 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முடிவடையும்.
Post a Comment