Header Ads



முஸ்லீம்கள் 5000 பேர் காணமால் போயுள்ளனர் - ஜனாதிபதியின் ஆணைக்குழு


(அஸ்ரப் ஏ சமத்)

முஸ்லீம்கள் 5000 பேர்கள் காணமால் போணதாக  இதுவரையிலும் எமது ஆணைக்குழுவுக்கு  முஸ்லீம்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணமல் போனோர்கள் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வேல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார்.

இன்று (3) வெள்ளவத்தையில் உள்ள காணமல்போனோர் ஆணைக்குழுவினால் காத்தாண்குடியில் விடுதலைப்புலிகளினால் 120 பேர் காணமல் போண விடயமாகவும் 65 பேர் புனித மக்காவுக்கும் வேறு சிலர் வியாபாரத்திற்கும் சென்றோர் 1990 களில் கல்முணை வழியாக காத்தாண்குடிக்கு வருகையில் குருக்கலமடத்தில் வைத்து விடுதலைப்புலிகளினால் கடத்திச் சென்று கொலைசெய்யப்பட்டனர். இவ்ர்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் நஸ்ட ஈடு பெறுவது இவர்கள் காணமல் புதைக்கப்பட்ட எச்சங்களை அடையாளங்காண்பது பற்றி இன்று கூட்டமொன்று நடைபெற்றது.

இந் கூட்டத்திற்கு காத்தாண்குடியைச் சேர்ந்த பொது ஜன ஜக்கிய முன்னணியின் கிழக்குமாகண உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாருக் தலைமையிலான குழுவைச் அழைத்து இன்று காணமல் போனோர் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வேல் சந்தித்து கலந்துறையாடினார். இச் சந்திப்பில் காணமல்போனோர்களின் உறவிணர்களை தணித்தணியாக சந்தித்து பேசுவதற்கு கொழும்புக்கு அழைத்துவரும்படியும், காணமல் போனோர்களின் புகைப்படங்கள் தஜ்தாவேசுக்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டது. அத்துடன் ஆணைக்குழு எதிர்வரும் மார்ச் 2ஆம வாரத்தில் மட்டக்களப்பு சென்று மனித எச்சங்கள் அடங்கியுள்ள இடங்களை பார்வையிடுதல் மற்றும இது சம்பந்தமாக நீதிமன்ற பரிசோதனை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச பரிசோதனைகளுக்கு முறைப்பாடு செய்தல் வேண்டும். என தீர்மாணிக்கப்ட்டது.    

No comments

Powered by Blogger.