மெய்வல்லுனர் விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கான பரீட்சை - 5 முஸ்லிம்கள் சித்தி
(ஏ.எல்.ஜனூவர்)
விளையாட்டு, விஞ்ஞானத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் பண்டாரநாயக்க சர்வேதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இப்பரீட்சையில் வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் 2ம் லெப்டினல் எஸ்.எல்.எச்.எம்.இனாமுல்லா அவர்கள் சித்தி பெற்று சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.
இவர் முன்னால் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் விளையாட்டு, உடற்பயிற்சி ஆசிரியருமாவார். இப்பரீட்சையில் இம்முறை 05 முஸ்லிம்கள் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment