4 திருடர்களை கட்டிப்போட்டு உயிரோடு எரித்துக் கொலை
இந்தியா - மேற்கு வங்காள மாநிலம் ஜல்பை குரி மாவட்டம் அம்பாரி என்ற இடத்தில் அதிகாலை நேரத்தில் மாடுகள் திருடு போனது. நீண்ட நாட்களாக இந்த சம்பவம் நீடித்தது. இந்த இடம் வங்காளதேச எல்லையில் உள்ளது. மாடு திருடர்களை பிடிக்க கிராம மக்கள் அதிகாலை நேரத்தில் தூங்காமல் விழிப்புடன் இருந்து கண்காணித்தனர்.
இன்று 02-02-2014 அதிகாலை 3 மணியளவில் சந்தேகப்படும் படியாக 4 மர்ம நபர்கள் அந்தப் பகுதியில் நடமாடினார்கள். மாடு திருடர்கள் என்று சந்தேகப்பட்ட கிராம மக்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களை கயிற்றால் கட்டிப் போட்டனர். திடீர் என்று 4 பேர் மீதும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 4 பேரும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிக் கிடந்தனர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment