Header Ads



தாய்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 முஸ்லிம் சிறுவர்கள் சுட்டுக்கொலை

தாய்லாந்தின் தெற்கு மாகாணமான நராதிவாட் மாகாணம், பாச்சோ மாவட்டத்தில் நேற்று இரவு ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் அருகில் உள்ள மசூதிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்கள்.

வீட்டின் அருகே வந்தபோது, சாலையின் ஓரமாக நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென்று அவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இச்சம்பவத்தில் 6 வயது, 9 வயது மற்றும் 11 வயது சிறுவர்கள் அதே இடத்தில்  பரிதாபமாக இறந்தனர். அவர்களின் பெற்றோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த தாக்குதல் முஸ்லீம்களை குறிவைத்து நடந்துள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.