மூடப்பட்டிருந்த 347 பாடசாலைகளில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
(எம்.எம்.ஏ.ஸமட்)
மூடப்பட்டிருந்த 347 பாடசாலைகளில் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகிறார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடந்து உரையாற்றுகையில்,
எந்தவொரு பாடசாலையையும் மூடும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையாது. மூடப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறந்து நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகளின் நிலைக்குக் கொண்டு வருவதே நோக்க உள்ளது. மகிந்த சிந்தனை எதிர்கால நோக்கின் அடிப்படையில் சகல பாடசாலைகளையும் தரமுயர்த்தி எதிர்கால மாணவ சமூதாயத்திற்கு சிறந்த கல்வி வாய்பை பெற்று கொடுப்பதை இலக்காக் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வருடம் 149 கிராமப் புற பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. அந்தப் பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேச மாணவர்கள் விஞ்ஞானப் பாடத்தினைக் கற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமும் அந்தப் பாடசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டிலுள்ள 350 தேசிய பாடசாலைகள் உட்பட மொத்தமுள்ள 9,731 பாடசாலைகளில் 6,312 தனிச் சிங்கள மொழிப் பாடசாலைகளும் 2808 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலப் பாடசாலைகள் 371உம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலப் பாடசாலைகள் 138 சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் 60உம் சிங்கள,தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலப் பாடசாலைகள் 42உம் உள்ளன.
இப்பாடசாகைளில் 29 இலட்சத்து 44 ஆயிரத்து 774 சிங்கள மொழி மூல மாணவர்களும் 10 இலட்சத்து 29 ஆயிரத்து 73 தமிழ் மொழி மூல மாணவர்களும் கல்வி பயில்கின்றனர்.
இப்பாடசாலைகளிலுள்ள இம்மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக 164,035 சிங்கள மொழி மூல ஆசிரியர்களும் 52,998 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும் 2,853 ஆங்கில மொழி மூல ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment