நான்கு மாதத்திற்குள் 320 கிலோ எடையை குறைத்த சவூதி அரேபிய இளைஞன்
அதிக எடைகொண்ட சவூதி அரேபிய நாட்டவர் நான்கு மாதங்களுக்குள் தனது எடையை 320 கிலோ கிறாமால் குறைத்து சாதனை படைத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் ஜஷான் பகுதியைச் சேர்ந்தவர் காலித் மொகசன் அல்- ஷயோரி (30), இவர் 610 கிலோ உடல் எடை இருந்தார். இதனால் தனது வாழ்வில் மிக அவதிப்பட்டு வந்தார்.
இதை அறிந்த சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் அவரது உடல் எடையைக் குறைக்க உத்தரவிட்டார். அதற்கான செலவை அரசு ஏற்பதாகவும் அறிவித்தார். இதையடுத்து அவர் ரியாத்தில் உள்ள மன்னர் பகத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர் குழு விசேஷமாக சிறப்பு சிகிச்சை அளித்தனர். அதிநவீன மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதனால் 4 மாதத்தில் அவர் 320 கிலோ உடல் எடை குறைந்தார்.
தற்போது அவரது உடல் எடை 290 கிலோ ஆக உள்ளது. அதிநவீனமான லேப்பிராஸ்கோபி முறையில் அறுவை சிகச்சை செய்து உடல் எடையை குறைத்ததாக மருத்துவமனை டொக்டர் அயத் அல்- குவர்த்தான் தெரிவித்தார்.
மேலும் அவருக்கு அமெரிக்காவில் இருந்து சிறப்பு வகையான உணவுகள் வரவழைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அவர் உட்காருவதற்கு ராட்சத பலமான இரும்பு நாற்காலி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அவருக்குபடுத்து தூங்க 3 படுக்கைகளைப் பயன்படுத்தி வந்தார். உடல் எடை குறைந்த பிறகு தற்போது அவர் ஒரு படுக்கையை மட்டுமே பயன்படுத்துகிறார் என்றும் அவர் கூறினார்.
சிகிச்சைக்கு முன்னர் அவரது உடல் எடை 610 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment