ஜனாதிபதியின் ஒரு நாள் செலவு 32 லட்சம் ரூபா - அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தினமும் 32 லட்சம் ரூபாவை செலவிடும் போது நாட்டு மக்கள் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுவதாக அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சம்மேளனத்தின் பிரதி செயலாளர் சந்தன சூரியாராச்சி இது குறித்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதிக்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 800 கோடி ரூபாவுக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதனடிப்படையில் அவரது ஒரு நாள் செலவு 32 லட்சம் ரூபா.
அதேவேளை பாடசாலை அதிபர்களுக்கு அரசாங்கம் இராணுவப் பயிற்சிகளை வழங்கியது. பயிற்சிகளை வழங்கியது மட்டுமல்லாமல் இராணுவ பதவிப் பட்டங்களை வழங்கியது.
இதனால் பாடசாலை அதிபர்கள் மாணவர்களை அதிபர் என்ற மனநிலையில் பார்க்காமல், இராணுவ மனநிலையில் நோக்குகின்றனர்.
பாடசாலை அதிபர்களின் இப்படியான நடவடிக்கைகள் காரணமாக பாடசாலை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.
Post a Comment