பிட்சா தயாரிக்கும் "3டி' பிரின்டர்
சுவை மிகுந்த, பிட்சா உணவு பண்டத்தை, மிகக் குறைந்த நேரத்தில் தயாரிக்கும், "3டி' பிரின்டரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் வடிவமைத்துள்ளார். அமெரிக்காவின், "நாசா' விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அஞ்சன் கான்டிராக்டர் என்ற பொறியாளர், பிட்சா தயாரிக்கும் வசதியுடன் கூடிய, 3டி பிரின்டரை உருவாக்க திட்டமிட்டார். நாசா நிறுவனம் அளித்த, நிதியுதவியில், 3டி பிரின்டர் தயாரிப்பில், அஞ்சன் வெற்றியடைந்தார். சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகளுக்கு, "கேனில்' அடைக்கப்பட்ட அல்லது, "பேக்' செய்யப்பட்ட உணவு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.
ஆனால், இந்த புதிய பிரின்டர் மூலம், எளிதான, சத்தான உணவுகளையும், பிட்சாவையும் தயாரித்துக் கொள்ளலாம். இந்த பிரின்டரில், மாவு, சுவைக்கான பொருட்களுடன், புரோட்டின், கொழுப்பு மாத்திரைகளையும் சேர்த்து, 70 நொடிகளில் சுவை மிகுந்த, பிட்சாவை தயாரித்து விடலாம் என, "யுடியூப்' இணையதள பக்கத்தில் செயல்முறையுடன் அஞ்சன் விளக்கியுள்ளார்.
Post a Comment